பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சட்டம் 2005 பிரிவு 17(1) இன் படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டிய ஆணையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கொண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் 08.07.2020 அன்று மாலை 05.30 மணிக்கு கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்
செயலாளர்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,
183/1 ஈ.வே.ரா பெரியார் சாலை,
பூந்தமல்லி நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை – 10.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்களை பரிசீலிக்கும் படமாட்டாது தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.